ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது
வடமராட்சி துன்னாலையில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 30 வயதுடைய குறித்த பெண் இன்று (08) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026