கட்டுப்பாட்டு காலத்தில் பதிவாகும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு!

கட்டுப்பாட்டு காலத்தில் பதிவாகும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு!

நடமாட்டக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்கப்படமாட்டாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.