டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் குணமடைந்தனர்
தெமடகொட பிரதேசத்தில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 5 தொற்றாளர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அதேவேளை டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட யாரும் கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இல்லை. எனவே பொதுமக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை புறக்கணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொடர்பாளர்களை அடையாளம் காண்பதற்கு, தேசிய புலனாய்வுப் பிரிவும், தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவும் இணைந்து செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.