
கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் நடமாட்டத்தடை- விசேட அறிவிப்பு இன்று அல்லது நாளை
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள நடமாட்டத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தளர்த்தப்படும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது அமுலில் உள்ள நடமாட்டத்தடை நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதெனவும் அவர் நேற்று குறிப்பிட்டார்.
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும். அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு அமையவே நடமாட்டத்தடை தளர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.