
நாளை முதல் கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்
ரஷ்யாவிலிருந்து இரண்டாம் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை (30) முதல் கண்டி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கிடையில், மேலும் ஐந்து மாவட்டங்களில் சினோபாம் தடுப்பூசி ஊசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ரஷ்ய நாட்டில் தயாரிக்கப்பட்ட 50,000 ஸ்பூட்னிக் தடுப்பூசி மாத்திரைகள் இரண்டாம் கட்டமாக நேற்று இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு சினோபாம் தடுப்பூசி அதிகளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாண ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதலான தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அஸ்ட்ராசெனகா கோவ்ஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை நேற்று 1331 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாத்திரை 343,293 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சினோபாம் தடுப்பூசியின் முதல் மாத்திரை நேற்று 16,622 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் மாத்திரை மொத்தமாக இதுவரை 580,031 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.