குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் தாதியர் குழு உறுப்பினர்கள் சிலர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வைத்தியசாலையின் பணிக்குழாமினருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே குறித்த கொரோனா தொற்றுறுதியானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானவர்களை கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை மற்றும் நாரம்மலவில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் நம்பிக்கைக்குரிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கொரோனா தொற்றுறுதியானவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.