நைஜீரியாவில் தொடரும் தீவிரவாதிகளின் கொலை வெறி -இன்றும் 60 இற்கும் மேற்பட்டோர் கொன்றொழிப்பு

நைஜீரியாவில் தொடரும் தீவிரவாதிகளின் கொலை வெறி -இன்றும் 60 இற்கும் மேற்பட்டோர் கொன்றொழிப்பு

நைஜீரியாவில் நடத்தப்பட்ட இருவேறு தாக்குதல்களில் 20 இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 40 பேர் என 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோஹராம் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மோங்குனோ மற்றும் நங்கன்சாய் போன்ற இடங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 81 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.