போராட்டத்தில் ஈடுப்பட்ட புலம்பெயர் தமிழர்கள்.!

போராட்டத்தில் ஈடுப்பட்ட புலம்பெயர் தமிழர்கள்.!

இலங்கைக்கான பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகரை கைது செய்யுமாறு கோரி புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தின் முன் இடம்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 பேர் வரை பங்குக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.