பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை.! கல்வி அமைச்சர் தெரிவித்துள்ள விசேட கருத்து
நாட்டில் தற்பொழுது காணப்படும் கல்வி முறையில் மாற்றம் ஒன்றை கொண்டுவர பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான கருத்தரங்குகளும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 05 அமைச்சுக்களை ஒன்றிணைத்து இம்முறை கல்வி அமைச்சு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.