வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு....!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு....!

மேல்,சப்ரகமுவ,மத்திய,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் முல்லைதீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பனகல் 02 மணியளவில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடக்கு மற்றுமட் வடமத்திய மாகாங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வீசும் காற்றின் வெகம் 40 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.