20ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை! சட்டமா அதிபர் விளக்கம்

20ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை! சட்டமா அதிபர் விளக்கம்

அரசமைப்பின் 20வது திருத்தத்திற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை என சட்டமா அதிபர் நீதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சட்டடா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக 20ஆவது திருத்த்தினை அமுல்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தென்னிலங்கையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது தொடர்பில் குழப்பமான சூழ்நிலை இருந்த நிலையில் தற்போது சட்டமா அதிபர் நீதியமைச்சுக்கு இது தொடர்பில் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.