இயற்கையின் சீற்றத்தால் பலியான 27 உயிர்கள்! மட்டக்களப்பில் துயரம்

இயற்கையின் சீற்றத்தால் பலியான 27 உயிர்கள்! மட்டக்களப்பில் துயரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, மாவடியோடை பகுதியில் திடீரென ஏற்பட்ட பலத்த இடி மின்னலினால் தாக்கப்பட்டு ஒரு மாட்டுப் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 27 பசு மாடுகள் பலியாகியுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் இரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதன் போது இடி மின்னலால் தாக்கப்பட்டு 27 வெண்ணிற பசுக்கள் பலியாகியுள்ளதாக மாட்டுப் பட்டி உரிமையாளர் தம்பியையா ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பலியாகிய பசுக்களின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியிலுள்ள கடற்படையினர் இறந்த பசு மாடுகளை கனரக இயந்திரத்தின் மூலம் நீண்ட அகழியைத் தோண்டி புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.