நியமன கடிதங்களை பெற்றுள்ள பட்டதாரிகள் - இன்று முதல் சேவையில்..

நியமன கடிதங்களை பெற்றுள்ள பட்டதாரிகள் - இன்று முதல் சேவையில்..

வேலையில்லா பட்டதாரிகளிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

தொழில் பெறும் 60 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் இணையத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 383 பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

அவர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதேவேளை, புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு ஒன்று ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட அறுபத்தொரு (61) பட்டதாரிகளில் ஐம்பத்தொன்பது (59) பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.