விடுதியை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள குலசிங்கம் திலீபன் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அரச விடுதியை பார்வையிடச் சென்றபோது அதிர்ச்சி சம்பவம் காத்திருந்துள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நீண்ட காலமாக அரச விடுதியைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகமாகவும் மக்கள் சந்திப்புக்களையும் அங்கு கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளார்.
எனினும் அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அரச விடுதி பூட்டப்பட்டு சாவி அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வன்னி மாவட்டத்திற்கு புதிதாக தெரியவாகிய நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனக்கு அலுவலகமொன்றினை வழங்க கோரி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சிவசக்தி ஆனந்தன் பயன்படுத்திய விடுதியின் சாவி வழங்கப்பட்டுள்ளது.
அரச விடுதியைப் பார்வையிடுவதற்காக அவரது கட்சி ஆதரவாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உள்ளே சென்றபோது மூட்டப்பட்டிருந்த அரச விடுதியினுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையடலை மேற்கொண்டிருந்துள்ளார் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வீடு வீடுதிக்கு பின்புறமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.