மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 433 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 433 பேர் கைது

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 440 கிராம் ஹெரோயின், ஒரு கிலோ கஞ்சா உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீகஸ்தென்னே-யடியன்தொட பகுதியில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபரொருவரை நுகேகொடை வலய குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.