பதுளையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - விரிவுரையாளர்கள் ஐவர் வைத்தியசாலையில்

பதுளையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - விரிவுரையாளர்கள் ஐவர் வைத்தியசாலையில்

பதுளை - மகியங்கனை  - சொரணதொட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.50 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

விரிவுரையாளர்கள் பயணித்த மகிழூர்தி வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் பெண் விரிவுரையாளர்கள் நால்வரும் ஆண் விரிவுரையாளர் ஒருவரும் இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.