ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ரஷ்யாவின் மூன்று யுத்தக் கப்பல்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ரஷ்யாவின் மூன்று யுத்தக் கப்பல்கள்

ரஷ்யாவிலிருந்து மூன்று யுத்தக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வருகை தந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

விநியோகம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கப்பலில் பணி புரியும் ஊழியர்களின் ஓய்வு கருதியே மேற்படி கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எட்மிரல் ட்ரிபக், எட்மிரல் வினோகிராதொவ், பொரிஸ் புட்டோமா ஆகிய பெயர்களைக் கொண்ட கப்பல்களே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே அந்த கப்பலுடனான தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை,

மேற்படி கப்பல்கள்  இலங்கையிலிருந்து மீண்டும் புறப்பட ள்ளதாகவும் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.