குற்றவாளிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் சொத்து விபரங்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 1917 என்ற இலக்கமொன்று கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த தொலைபேசி ஊடாக கடந்த மாதத்தில் மாத்திரம் 671 தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 110 பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ருவான் குணசேகர இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்
அதன்படி, குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.