போலிநாணயத்தாள் அச்சிடும் நிலையம் முற்றுகை

போலிநாணயத்தாள் அச்சிடும் நிலையம் முற்றுகை

போலி நாணயத்தாள்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீரகெட்டிய, ஹுன்னகும்புர பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 5000 ரூபா போலி நாணத்தாள்கள் 200 கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வீரகெட்டிய, உடயால பகுதியில் இருந்த போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்றை சுற்றிவளைத்து மற்றுமொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த இடத்தில் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய கணணி மற்றும் பிரிண்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டஇருவரும் 27 மற்றும் 39 வயதுடைய என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்