அதிர்வு நிலை தொடர்பில் ஆராய மேலும் குழு..

அதிர்வு நிலை தொடர்பில் ஆராய மேலும் குழு..

கண்டி மாவட்டத்தின் பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்டதாக கூறப்படும் அதிர்வு நிலை தொடர்பில் ஆராய மேலும் குழுவொன்று அந்த பகுதிகளுக்கு அனுப்பபட்டுள்ளது.

புவியியல் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி 6 பேர் அடங்கிய குழுவொன்று அந்த பகுதிக்கு அனுப்பபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 29 ஆம் திகதி இரவு கண்டி - தலத்துஒய, குருதெனிய, ஹாரகம, அனுரகம உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு நிலை உணரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் புவியியல் பணியகம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்ததுடன் அதன் அறிக்கை நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.