மத்தள சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தினை பாரிய அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பதவியேற்றதினை தொடர்ந்து மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்து அதனை பார்வையிட்டார்.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
தற்பொழுது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமையின் காரணமாக எமக்கு விமான நிலையத்தினை திறப்பதற்கு முடியாமல் உள்ளது.
இருந்தாலும் சுகாதாரத் துறையினர் இதற்கான அனுமதியினை வழங்குவார்களேயானால் விமான நிலையத்தினை எம்மால் திறக்க முடியும்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என்பனவற்றினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அமைச்சர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பிரதியமைச்சர் டி. வி. சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ச,விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டி ஆரச்சி ஆகியோருடன் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.