பொலிஸாரின் தேடுதலில் சிக்கிய போதைப்பொருள் கும்பல்கள்
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 400 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரையான காலப் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் ஹெரோயின் கடத்தல் தொடர்பாக 171 பேரும், கஞ்சா கடத்தல் தொடர்பாக 94 பேரும், சட்டவிரோத மதுபான பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டில் 85 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 பேரும், ஏனைய குற்றச்சாட்டுகளில் 33 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.