மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகர மருத்துவமனையில் அனுமதி!

மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகர மருத்துவமனையில் அனுமதி!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர வெலிகடை சிறைச்சாலையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயசேகர மரண தண்டனை கைதியாக வெலிகடை சிறைச்சாலையில் வை.ஓ சிறைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியசாலையின் இந்த விடுதியில் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபத்திரன மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேஜர அஜித் பிரசன்ன ஆகியோரும் தங்கி இருப்பதாக சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.