மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது !

மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது !

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த இருவரை நேற்று புதன்கிழமை (08) இரவு வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது மட்டக்களப்பில் இயங்கிவரும் வாள்வெட்டுக்குழு கடந்த மாதம் 29 ம் திகதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்திய மட்டக்களப்பு வாள்வெட்டுக் குழுவினர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு குழுவினர்

இந்த நிலையில் தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு குழுவினர் தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ தினமான நேற்று புதன்கிழமை இரவு காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான குழுவினர் வாள்வெட்டுக் குழுவினர் தலைமறைவாகியிருந்த வீட்டை சுற்றிவளைத்து இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் 3 வாள்களை மீட்டனர்

மட்டக்களப்பில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது ! | Two Members Sword Cutting Group Arrested In Batti

 

கடந்த 2025ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரையம்பதி மகாவித்தியாலய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் இந்த குழுவில் அந்த பகுதியைச் சோந்த 15 தொடக்கம் 28 வயது வரையிலான 10 ற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு செயற்பட்டுவருவதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.