ட்ரம்ப்பிடம் மற்றுமொரு நாட்டை கோர்த்துவிட்ட நெதன்யாகு!
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் உள்ளிட்டஅந்நாட்டின் மூத்த அதிகாரிகளின் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்கள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் முறையிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ட்ரம்ப்புடன் நடந்த தொலைபேசி உரையாடலின் போது நெதன்யாகு அவற்றை தெரிவித்தாக கூறப்படுகிறது.
துருக்கி இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் காரணமாக அந்நாட்டின் விமானப்படைக்கு மேம்பட்ட தளங்களையும் ஆயுதங்களையும் விற்க வேண்டாம் என்று நெதன்யாகு ட்ரம்பை வலியுறுத்தியதாக தெரியவருகிறது.
நேட்டோ உச்சிமாநாடு
இந்த வாரம் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில், F-35 திட்டத்தில் மீண்டும் இணைவதற்கான துருக்கியின் விருப்பம் குறித்து ட்ரம்பும் எர்டோகனும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயெ, இஸ்ரேல் பிரதமரின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.