ஜேர்மனியை 2 -1 என வீழ்த்திய ஈக்வடோர்

ஜேர்மனியை 2 -1 என வீழ்த்திய ஈக்வடோர்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் குழு இ பிரிவில் உள்ள ஈக்வடோர் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்றது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேய ஜேர்மனி அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. 

ப்ளோரியன் விரட்ஸ் ஏற்படுத்திய அசிஸ்ட்-இல் லெராய் சேன் கோல் அடிக்க ஜேர்மனி அணி 1 - 0 கணக்கில் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து அபாரமாக ஆடிய ஈக்வடோர் 9-ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த அணியின் நில்சன் அன்குலோ தனது அணிக்கு முதல் கோலை அடிக்க ஈக்வடோர் அணி 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது. 

ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் தங்களது கோல் கணக்கை உயர்த்த முடியவில்லை. 

இதனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணி மற்றொரு கோல் அடித்து வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

இதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தின் 77-ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணியின் கொன்சலோ பிளாடா கோல் அடித்தார். 

இதனால் ஈக்வடார் அணி 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதிவரை ஜேர்மனி கோல் அடிக்காததை அடுத்து ஈக்வடோர் அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈக்வடோர் அணி வௌியேற்றும் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.