A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி: ஒருவர் படுகாயம்
ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், குறித்த லொறியானது தரித்து நின்ற பட்டா மீது கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.