யாழில் 48 மணிநேரத்தில் 13 பேர் கைது
எஸ். நிதர்ஷன்
யாழ். நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின்போது, போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.