தமிழர் பகுதியில் குண்டு வெடிப்பால் பரபரப்பு ; அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்

தமிழர் பகுதியில் குண்டு வெடிப்பால் பரபரப்பு ; அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று (29) காலை 11:30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் குண்டு வெடிப்பால் பரபரப்பு ; அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர் | Bomb Blast In Tamil Area Two In Icu

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணியின் போது  நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்து இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.