பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 94 வயது முதியவர்

பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 94 வயது முதியவர்

மாத்தறை - நில்வலா ஆற்றின் மகாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற முதியவரை கெமுனு கண்காணிப்பு படையினர் விரைந்து காப்பாற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 94 வயது முதியவர் | 94 Year Old Man Tried Commit Jumping Bridge

94 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த நபரை மூன்றாவது கெமுனு கண்காணிப்பு படையினர் மீட்டு, மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.