இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை

இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (11.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை | Heavy Rain With Thunderstorm Weather Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமேல், வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.