பாணந்துறையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு | Gun Shot Panatura Hirana

காயமடைந்த நபர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மற்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.