தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல்

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல்

மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை தொடர்பான வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து, அசிட் வீசிய குற்றச்சாட்டில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்பதி அகலவத்தையில் உள்ள பிம்புரா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல் | Couple Attacked A Man With Acid

கடந்த 8 ஆம் திகதி இரவு 7.05 மணியளவில் நடந்த அசிட் தாக்குதலில் காயமடைந்தவர் பிம்புரா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் களுத்துறையில் உள்ள நாகோடா போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபரின் மகன், அசிட் தாக்குதல் நடத்திய பெண் குளிப்பதை அவர்களின் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அசிட் வீச்சு நடந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல் | Couple Attacked A Man With Acid

ஏற்கனவே அசிட் வீச்சுக்குள்ளான நபர் நள்ளிரவு 12.20 மணியளவில் சந்தேகநபர்களின் வீட்டிற்குச் சென்று ஏன் தன் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது என வினவியுள்ளார்.

இதன்போது அந்த தம்பதி மீண்டும் அசிட் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தம்மிக்க சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.