தமிழர் பகுதியில் கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; தாய், தந்தை கண் முன்னே பலியான மகன்

தமிழர் பகுதியில் கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; தாய், தந்தை கண் முன்னே பலியான மகன்

மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; தாய், தந்தை கண் முன்னே பலியான மகன் | Family Hit By Tragic Accident Son Killed

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவரும்போது,

அப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் நேற்று (10) மாலை நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான். மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.