தாயை கொலை செய்யப் போவதாக பாடசாலை மாணவியை துன்புறுத்திய நபர்

தாயை கொலை செய்யப் போவதாக பாடசாலை மாணவியை துன்புறுத்திய நபர்

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் தாயை கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தனமல்வில தலைமையக பொலிஸ் அதிகாரி, குறித்த மாணவியின் பாடசாலையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சிறப்பு உறையாற்றியுள்ளார்.

தாயை கொலை செய்யப் போவதாக பாடசாலை மாணவியை துன்புறுத்திய நபர் | School Student Cheated By Relativeஇதன் காரணமாக தெளிவடைந்த மாணவி, தனக்கு நடந்த துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாடசாலை அதிபர், தனமல்வில பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாயை கொலை செய்யப் போவதாக பாடசாலை மாணவியை துன்புறுத்திய நபர் | School Student Cheated By Relative

மேலும் முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் சிறுமி மீது பலமுறை கடுமையான பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.