3 வயது தங்கையின் உயிரை பறித்த அக்காவின் பாடசாலை பேருந்து ; நடு வீதியில் துடிதுடித்து பிரிந்த உயிர்

3 வயது தங்கையின் உயிரை பறித்த அக்காவின் பாடசாலை பேருந்து ; நடு வீதியில் துடிதுடித்து பிரிந்த உயிர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பள்ளிப் பஸ் முன் சக்கரத்தில் சிக்கி 3 வயது ஆஷியா என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறிதத் சிறுமியின் அக்கா பாடசாலைக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பியுள்ளார்.

3 வயது தங்கையின் உயிரை பறித்த அக்காவின் பாடசாலை பேருந்து ; நடு வீதியில் துடிதுடித்து பிரிந்த உயிர் | School Bus Driven By Sister Kills 3 Yr Old Girl

தனது அக்காவை பார்த்ததும் ஓடி சென்ற தங்கை ஆஷியா பஸ்சின் முன்புற சக்கரத்தின் அருகில் சென்றாள்.

இதை அறியாத சாரதி பஸ்ஸை இயக்கியதால் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உறவினர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும் சாரதியை கைது செய்யக்கோரி தேன்கனிக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டனர் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.