கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி

கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார்.

இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி விபத்தில் யாழ் இளைஞன் பலி | Jaffna Youth Dies In Kilinochchi Accident

காயமடைந்த நபருக்கு மேலதிக சிகிச்சை வழங்கும் நோக்கில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது நிலைமை தீவிரமாக மாற்றமடைந்ததால்,உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.