13 சிறுவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி விபத்து - மூவர் கவலைக்கிடம்

13 சிறுவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி விபத்து - மூவர் கவலைக்கிடம்

அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்ஹேன, குருகந்த பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை பைகளுடன் மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி, வாகனத்தின் எடையைத் தாங்க முடியாமல், அதிவேகமாக பள்ளத்தில் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

13 சிறுவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி விபத்து - மூவர் கவலைக்கிடம் | Auto Carrying 13 Children Meets With An Accident

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி பேருவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த 6 பேர் நாகொட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்