
கொழும்பில் ஆணின் பெயரில் வாக்களித்த பெண்ணால் குழப்பம்
கொழும்பின் புறநகர் பகுதியான அத்தடிய பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஆணில் பெயரில் பெண் ஒருவர் வாக்களித்துள்ளதாக வாக்களிப்பு நிலையத்தில் இருந்த கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.
தனது வாக்கினை வழங்குவதற்கு ஆண் நபர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் குறித்த வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை யாரோ ஒருவர் வாக்களித்த விடயம் தெரியவந்துள்ளது.
அது மிகப்பெரிய அநீதி என குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவகரிடம் வினவிய போது, சிறிய தவறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வினவுவதற்கு வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்றதாகவும் எனினும் அதற்கு அனுமதி கிடைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.