எதிர்வரும் 29ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 29ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 29ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டைகள் விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 16ஆம் திகதியிலிருந்து வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, தபால் திணைக்களத்துக்கு 14 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது வீடுகளுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கிறோம்.

எதிர்வரும் 29ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக அறிவிப்பு | Voter Card Distribution In Sri Lanka

அதன் பிரகாரம் இதுவரையில் 29 - 30 சதவீத வாக்குச் சீட்டுகளை விநியோகித்து நிறைவு செய்திருக்கிறோம். எதிர்வரும் 29ஆம் திகதிவரை வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியும்.

எதிர்வரும் 27ஆம் திகதி வாக்குச்சீட்டு விநியோகிப்பதற்காக விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனூடாக 29ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச் சீட்டுகளை விநியோகித்து நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது நிலவும் காலநிலையினால் அதிகாரிகள் நெருக்கடியிலேயே இதனைச் செய்து வருகிறார்கள். தேர்தல் நடவடிக்கைகளில் தபால் திணைக்களத்துக்கு முக்கிய பங்கு இருந்தாலும் எங்களின் கடமைகளை குறைபாடின்றி நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.

எதிர்வரும் 29ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக அறிவிப்பு | Voter Card Distribution In Sri Lanka

தேர்தல் தினமான 06ஆம் திகதி வரையில் தபால் திணைக்கள அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. விசேட காரணங்களுக்காக பரிபூரண அனுமதிக்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.