சில பகுதிகளுக்கு அவசர நீர் வெட்டு

சில பகுதிகளுக்கு அவசர நீர் வெட்டு

நாட்டில் சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சில பகுதிகளுக்கு அவசர நீர் வெட்டு | Emergency Water Cut In Some Areas

அதன்படி காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் சபை கூறியுள்ளது.