தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய்

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, பின்னர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அக்கட்சித் தலைவா் விஜய் வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு, கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் "தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பிறக்குது" எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது.