புகையிரதம் மோதி 19 வயது இளைஞர் பலி

புகையிரதம் மோதி 19 வயது இளைஞர் பலி

கண்டி கடுகண்ணாவை - பிலிமத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரதம் மோதி 19 வயது இளைஞர் பலி | 19 Year Old Youth Died After Being Hit By A Train

சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.