தென் கொரியாவில் வேலைவாய்ப்பு ; இலங்கையில் இருந்து பறந்த 100 இளம் பெண்கள்

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு ; இலங்கையில் இருந்து பறந்த 100 இளம் பெண்கள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

இவர்களில் 100 இளம் பெண்களும் அடங்குவதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும் (Manufacturing), 680 பேர் கடற்றொழில் துறையிலும் (Fisheries), 23 பேர் கட்டுமானத் துறையிலும் (Construction), இருவர் விவசாயத் துறையிலும் (Agriculture) வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு ; இலங்கையில் இருந்து பறந்த 100 இளம் பெண்கள் | Thousands Of Sri Lankans Working In South Korea

இதற்கிடையில், தென் கொரியாவில் ஏற்கனவே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள மேலும் 200இற்கு மேற்பட்ட இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சைக்கு (Korean Language Proficiency Test) 36,475 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், குறித்த பரீட்சை ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.