யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

யழ்ப்பாணம் மாவட்டம், கந்தர்மடத்தில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து, பலாலி வீதி, கந்தர்மடம், மணற்தரை வீதியில் இயங்கிய விபச்சார விடுதியை முற்றுகையிட்டனர்.

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்! | Confessions Given Women Caught A Brothel In Jaffnaமுற்றுகையின்போது, அந்த வீட்டின் உரிமையாளர், இரு விபச்சார பெண்கள், ஒரு வாடிக்கையாளர் ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர்.

மற்றொருவர் மதில் பாய்ந்து ஓடிவிட்டார். அவர் தப்பியோடும் போது தொலைபேசி கீழே விழுந்ததில் அதை மீட்டு பொலிஸார் பரிசோதனை செய்ததில் அவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபச்சார பெண்கள் நீர்வேலி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த 23, 28 வயதானவர்கள். அவர்களிடம் வந்த வாடிக்கையாளர் கோப்பாயை சேர்ந்த 24 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்! | Confessions Given Women Caught A Brothel In Jaffna

சமீபத்தில் யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் விபச்சார விடுதியொன்று சிக்கியது. அது சிக்கியதை தொடர்ந்து, அந்த விடுதியை நடத்திய நபர் இந்த விடுதியுடன் தொடர்புபட்டு செயற்பட்டதாக கைதான பெண்ணொருவர் தெரிவித்தார்.

குறித்த நபரே வெள்ளை நிற முச்சக்கர வண்டியில் தன்னை இந்த விடுதியில் கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும், அவரே வாடிக்கையாளர்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, யாழ் நகரில் லோன்றி நடத்தும் ஒருவரும் இந்த விபச்சார வலையமைப்பில் உள்ளார். சுண்டுக்குளி விபச்சார விடுதிக்கும் அவர் வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்து வந்துள்ளார்.

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்! | Confessions Given Women Caught A Brothel In Jaffnaதற்போது சிக்கிய விடுதியில் கைதான பெண்ணொருவரிற்கான வாடிக்கையாளரை அந்த லோன்றி நடத்துபவரே அனுப்பி வைத்து வருகிறார்.

இரண்டு பெண்களிடமும் பாலியல் சேவை பெறுவதற்காக நபர் ஒருவரிடம் ரூ.7,000 முகவர்களால் வாங்கப்படுகிறது. இதில் ரூ.2,000 இந்த பெண்களிடம் வழங்கப்படுகிறது.

நாளாந்தம் தலா 6,7 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பாலியல் சேவை வழங்குவதாக கைதான 2 யுவதிகளும் தெரிவித்துள்ளனர்.

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்! | Confessions Given Women Caught A Brothel In Jaffnaயாழ்ப்பாணத்தில் இயங்கும் சில அழகு நிலையங்கள் ஊடாகவும் இந்த முகவர்கள் விபச்சார அழகிகளை பெற்று வருவதாகவும், சில சிங்கள விபச்சார பெண்களையும் நகரில் தங்க வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாகவும் கைதான பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாளை அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.