பொலிஸ் உத்தியோகத்தரை கடுமையாக தாக்கிய சந்தேகநபர்!

பொலிஸ் உத்தியோகத்தரை கடுமையாக தாக்கிய சந்தேகநபர்!

காலி - களுவெல்ல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது உடைந்த கண்ணாடி துண்டுகளால் கடுமையாக தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த காலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை கடுமையாக தாக்கிய சந்தேகநபர்! | Attack On Police Officerஆயுதத்தால் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்வதற்கு காலி பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போதே குறித்த சந்தேகநபரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் குறித்த சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.