இடி, மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இடி, மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடி, மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | The Department Meteorology Has Issued Emergency

இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.