சிவனொளிபாத மலை யாத்திரிகர்களிடம் விசேட சோதனை!

சிவனொளிபாத மலை யாத்திரிகர்களிடம் விசேட சோதனை!

வார இறுதி நாட்களில் சிவனொளிபாத மலைக்கு தொடருந்தில் வருகைத்தரும் யாத்திரிகர்களை சோதனைக்கு உட்படுத்துவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

ஹட்டன் காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 

இதன்போது, வருகைத்தரும் யாத்திரிகர்கள் போதைப்பொருளுடன் வருகைத்தருகின்றார்களா? என்பது தொடர்பில் விசேட சோதனை நடத்தப்படவுள்ளது.
 

சிவனொளிபாத மலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களுக்காக நல்லத்தண்ணியில் இருந்து செல்வதற்காக, ஹட்டன் பேருந்துசாலையினால் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.