கால்வாயிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு சடலம் மீட்பு!

கால்வாயிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு சடலம் மீட்பு!

கால்வாய் ஒன்றிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லியாங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

மகல்தெனிய வயமுடுக்குவ சந்திக்கு அருகில் கால்வாயிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் கால்வாயில் கிடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கால்வாயிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு சடலம் மீட்பு! | Rescue Of A One Day Old Infant From The Canal

சடலம் மீட்கப்பட்ட போது குறித்த சிசு சிதைந்து துர்நாற்றம் வீசுயதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிசுவை யாரேனும் ரகசியமாக பிரசவித்து கால்வாயில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.