பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை.

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை.

நாட்டில் தற்போது கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சி இன்று (20) குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய நிலைமை காணப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்நறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை | Sl Weather Today Climate Rain North East Peoples

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை! பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை | Sl Weather Today Climate Rain North East Peoples

சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.